வலுவிழந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும்


வலுவிழந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே வலுவிழந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் அருகே வலுவிழந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த மின்கம்பம்

திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் ஊராட்சி மேலகுடியான தெருவில் சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு அப்பகுதிக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாலையோரம் உள்ள ஒரு மின்கம்பம் முழுவதும் சேதமடைந்து அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் இந்த மின்கம்பம் வலுவிழந்து எந்த நேரத்திலும் சாய்ந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் இப்பகுதியில் செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது.

அசம்பாவிதம் ஏற்படும் முன்

இதனால் இப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படுவதற்கு முன் மேற்கண்ட இடத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story