தூத்துக்குடியில் நெய்தல் கலைவிழா


தூத்துக்குடியில் நெய்தல் கலைவிழா
x

தூத்துக்குடியில் நெய்தல் கலைவிழாவில் பாரம்பரிய விளையாட்டுக்களை மக்கள் விளையாடி மகிழ்ந்தனர்

தூத்துக்குடி

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் 4 நாட்கள் நெய்தல் கலைவிழா நடக்கிறது. 2-வது நாள் விழா நேற்று மாலை தொடங்கியது. விழாவுக்கு கனிமொழி எம்.பி தலைமை தாங்கினார். அவர் அங்கு அமைக்கப்பட்டு உள்ள அரங்குகளை நேரடியாக சென்று பார்வையிட்டார். பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து உணவுத்திருவிழாவில் அமைக்கப்பட்டு உள்ள கடைகளில் உணவு பொருட்களையும் வாங்கி உண்டு மகிழ்ந்தார்.

தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் கும்மி, கோலாட்டம், களரி, கரகாட்டம், தேவராட்டம், ஜிம்பளா மேளம், பொய்க்கால் குதிரை, பெரியமேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் பாரம்பரிய விளையாட்டுக்களும் நடந்தன. பானை உடைத்தல், பாம்பு கட்டம் போன்ற விளையாட்டுக்கள் பிரமாண்டமாக வைக்கப்பட்டு இருந்தன. இதில் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடி மகிழ்ந்தனர்.

விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story