திருநங்கையை வெட்டிய 4 பேருக்கு வலைவீச்சு


திருநங்கையை வெட்டிய 4 பேருக்கு வலைவீச்சு
x

திருநங்கையை வெட்டிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

மலைக்கோட்டை, அக்.18-

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாசிகா (வயது 23) என்ற திருநங்கை திருச்சி-சென்னை பைபாஸ் ரோட்டில் சஞ்சீவி நகர் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்ற 4 பேர் திருநங்கையிடம் தகராறு செய்து எங்களை போலீசில் மாட்டிவிட பார்க்கிறாயா? என்று கேட்டு கையில் வைத்திருந்த வாளால் திருநங்கையை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த திருநங்கை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story