மேலூர் அருகே களைகட்டிய மீன்பிடி திருவிழா -கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளிய பொதுமக்கள்


மேலூர் அருகே  களைகட்டிய மீன்பிடி திருவிழா  -கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளிய பொதுமக்கள்
x

மேலூர் அருகே சருகுவலையப்பட்டியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரை

மேலூர்

மேலூர் அருகே சருகுவலையப்பட்டியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மீன்பிடி திருவிழா

மேலூர் அருகே சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை தொடர்ந்தும், கோடை காலம் என்பதால் கண்மாயில் தண்ணீர் வற்ற தொடங்கியதை தொடர்ந்தும் அங்கு மீன்பிடி திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கண்மாயில் தண்ணீர் இருக்கும் போது மீன்குஞ்சுகள் வளர்ப்புக்காக விடப்படுகின்றன. அந்த மீன்குஞ்சுகள் வளர்ந்ததை தொடர்ந்தும், கண்மாயில் தண்ணீர் குறைந்ததை தொடர்ந்தும் மீன்பிடி திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. கடந்த சில நாட்களாக மேலூர் பகுதியில் மீன்பிடி திருவிழா களை கட்ட தொடங்கி உள்ளது.

அந்த வகையில் சருகுவலையபட்டியில் உள்ள நைனான் கண்மாயில் மீன்பிடி திருவிழா நேற்று நடைபெற்றது. சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்மாய் கரையோரம் திரண்டிருந்தனர்.

மீன்களை அள்ளிய பொதுமக்கள்

ஊர்முக்கியஸ்தர்கள் மீன்பிடிக்க வெள்ளை வீசியதும் திரண்டிருந்த பொதுமக்கள் கண்மாய்க்குள் இறங்கி ஆர்வத்துடன் மீன்களை பிடித்தனர். கட்லா உள்பட பல்வேறு நாட்டு வகை பெரிய மீன்களை பொதுமக்கள் பிடித்து மகிழ்ச்சியுடன் சென்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சிறுவர்கள், பெண்கள் என ஏராளமானோர் வந்து மீன்களை பிடித்தனர். இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் மீன்குழம்பு வாசனை கமகமத்தது.


Next Story