மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு
மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
கீழக்கரை,
கோடைகால விடுமுறை முடிந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டு உற்சாகத்துடன் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு சென்றனர். அதேபோல் கீழக்கரையில் அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் வரவேற்பு அளித்தனர். இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெயலட்சுமி நாடார் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, முகைத்தீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஹைராதுல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளி, ஹமீதியா ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சதக்கத்துல் ஜாரியா, நூராணியா, தீனியா, பேரல் மெட்ரிக் மற்றும் அரசு பள்ளிகளில் அனைத்து மாண வர்களும் பள்ளிக்கு ஆர்வமுடன் வந்தனர். அனைத்து பள்ளிகளிலும் பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்று இனிப்புகள் வழங்கினர்.இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் முகைதீன் இப்ராகிம் மற்றும் முகைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மவுலா முகைதீன் ஆகியோர் பள்ளி மாணவர்களை வரவேற்று இனிப்புகள் வழங்கினர்.