20 ஆயிரம் கி.மீ தூரம் நடை பயணம் மேற்கொண்ட வாலிபர்களுக்கு ஓசூரில் 20 ஆயிரம் கி.மீ தூரம் நடை பயணம் மேற்கொண்ட வாலிபர்களுக்கு ஓசூரில் வரவேற்பு


20 ஆயிரம் கி.மீ தூரம் நடை பயணம் மேற்கொண்ட வாலிபர்களுக்கு ஓசூரில் 20 ஆயிரம் கி.மீ தூரம் நடை பயணம் மேற்கொண்ட வாலிபர்களுக்கு ஓசூரில் வரவேற்பு
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மண் வளத்தை காக்க வலியுறுத்தி 20 ஆயிரம் கி.மீ தூரம் நடை பயணம் மேற்கொண்ட வாலிபர்களுக்கு ஓசூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

டெல்லி வடகிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள் பிரதீப் (வயது24), ஜெய்சுலாங்கி (24). இவர்கள் 2 பேரும் இயற்கையை நேசிப்பவர்கள், இதில் பிரதீப் புகைப்பட கலைஞராகவும், ஜெய்சுலாங்கி வெப் டிசைனராகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மண் வளத்தை காக்க இந்தியா முழுவதும் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தனர். அதன்படி கடந்த மே 7-ந் தேதி டெல்லியில் போப்ரா என்ற இடத்தில் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினர். அங்கிருந்து உ.பி, ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் வழியாக தமிழகத்தில் உள்ள கோவைக்கு கடந்த செப்டம்பர் 3-ந் தேதி வந்தனர். கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்ற அவர்கள் சத்குரு ஜக்கி வாசுதேவை சந்தித்தனர். பின்னர் அங்கிருந்து சைக்கிள் பயணமாக 2 வாலிபர்களும் ராமேஸ்வரம், கன்னியாகுமரிக்கு சென்றனர். தொடர்ந்து அவர்கள் சைக்கிள்களில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வந்தனர். அங்கு அவர்களுக்கு, தன்னார்வலர்கள் நரசிம்மன், சிவராமானந்தா சுவாமிகள், சுதா நாகராஜன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு செல்கின்றனர். செல்லும் இடங்களில் பொதுமக்களிடம் மண்வளம் காக்க விழிப்புணர்வை ஏற்படுத்தியும் கையெழுத்து வாங்கியும் தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர். மண் வளத்தை காக்க இந்தியா முழுவதும் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 20 ஆயிரம் கி.மீ தூரத்தை கடந்து லடாக்கை சென்றடையும் 2 அவர்கள் அங்கிருந்து டெல்லி சென்று மண் வளம் காக்கும் தங்களது கோரிக்கைகள் மற்றும் பொதுமக்களிடம் பெறப்பட்ட விழிப்புணர்வு கையெழுத்து பட்டியலை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.


Next Story