தியாகிகள் ஜோதி பயணத்திற்கு ஓசூரில் வரவேற்பு
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தியாகிகள் ஜோதி பயணத்திற்கு ஓசூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஓசூர்
விவசாயிகள் சங்கத்தின் 35-வது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் திருச்சூரில் வருகிற 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, அகில இந்திய விவசாயிகள் சங்க தியாகிகள் ஜோதி பயணம் தெலுங்கானா மாநிலத்தில் தொடங்கி, கர்நாடக மாநிலம் வழியாக ஓசூரை வந்தடைந்தது. தியாகிகள் ஜோதி பயணத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர்.
ஓசூர் காந்தி சிலை அருகே, ஜோதி பயணத்தில் பங்கு கொண்டுள்ள விவசாயிகள் சங்க தியாகிகளுக்கு, கட்சியினர் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து அவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஜோதி பயணம் ஓசூரில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு, .அகில இந்திய கிசான் சங்க நிதி செயலாளர் கிருஷ்ண பிரசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன், இடைக்குழு செயலாளர்கள் ஜெயராமன், ராஜா ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.