டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு வரவேற்பு


டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு வரவேற்பு
x

உளுந்தூர்பேட்டையில் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் திண்டிவனத்தில் இருந்து காரில் புறப்பட்டார். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் டாக்டர் ராஜா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் வாசன் செழியன், அமுதமொழி, ராமச்சந்திரன், பாண்டியன், ரவிகுமார், இளையராஜா, அழகேசன், மணிகண்டன், ஏழுமலை, பிரவீன்குமார், சதீஷ்குமார், அய்யனார், ஆதி விஸ்வநாதன், முரளி கோவிந்தன், இளவரசன் வடிவேல், ராஜேஷ், வீரமணி, சக்திவேல், மணி, ராஜ்குமார், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு மாவட்ட தலைவர் தமிழ்வாணன் தலைமையில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அப்போது முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனி மணிராஜ், பாண்டியன், நேரு, அறிவழகன், மூர்த்தி, ஜெயக்குமார், ராஜா, அய்யனார், பாலாஜி, ராஜேந்திரன், சிவா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். எலவனாசூர்கோட்டையில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக திருநாவலூர் ஒன்றியம் சார்பில் மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் தவ ஞானம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story