தியாகதுருகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு


தியாகதுருகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு
x

தியாகதுருகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் இருந்து திருவண்ணாமலை பகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார். அப்போது தியாகதுருகம் பஸ் நிலையத்தில் ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் ஷியாம் சுந்தர் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பூங்கொத்துகள் மற்றும் சால்வைகளை வழங்கினர். அப்போது மாவட்ட செயலாளர் குமரகுரு, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபு, அழகுவேல் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story