கிருஷ்ணர் ரதத்திற்கு வரவேற்பு
உடன்குடி பரமன்குறிச்சியில் கிருஷ்ணர் ரதத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
உடன்குடி:
நெல்லையில் உள்ள அகில பாரத கிருஷ்ணபக்தி இயக்கம் சார்பில் இந்தியா முழுவதும் பவனி வரும் கிருஷ்ணர் ரதம் உடன்குடிக்கு வந்தது. உடன்குடி பஜார், கொட்டங்காடு, சந்தையடியூர் உட்பட்ட பகுதிகளில் பவனி வந்த ரதத்திற்கு இந்து இலயப் பாதுகாப்புக்குழு மாநில செயலர் பாலன், தொழிலதிபர் மகேந்திரன், பா.ஜ.க. தொழிற்சங்க நிர்வாகி அப்பாத்துரை ஆகியோர் முன்னிலையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
உலக நாடுகள் போர்ப் பதற்றம் இன்றி அமைதி நிலவவும், நாட்டில் நன்கு மழை பெய்து விவசாயம், தொழில்வளம், வியாபாரம் பெருகவும் வேண்டி சிறப்பு பஜனைகள், பிரார்த்தனை நடைபெற்றது. அனைத்து பக்தர்களுக்கும் பகவத் கீதை மற்றும் ஆன்மீக புத்தகங்கள் வழங்கப்பட்டது.
பரமன்குறிச்சியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், சேவா பாரதி மாவட்ட தலைவர் கிருஷ்ணமந்திரம் ஆகியோர் கலந்துகொண்டு ரதத்தில் வரும் பசுவிற்கு வைக்கோல், காய்கனிகள், பழ வகைகள் வழங்கினர்.