பட்டுக்கோட்டை வீரர்- வீராங்கனைக்கு வரவேற்பு
பட்டுக்கோட்டை வீரர்- வீராங்கனைக்கு வரவேற்பு
பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் ஜிம் பயிற்சியாளர் ஆவார். பட்டுக்கோட்டை அண்ணாநகரை சேர்ந்த செல்வமுத்து மகள் லோகப் பிரியா (வயது22). இவர் கரம்பயத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. படித்துள்ளார். ரவிச்சந்திரனும், லோகப்பிரியாவும் பட்டுக்கோட்டையில் இருந்து காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள நியூசிலாந்து சென்றனர். போட்டியில் பெண்கள் பிரிவுக்காக நடந்த வலுதூக்கும் போட்டியில் லோகப்பிரியா 52 கிலோ ஜூனியர் பிரிவில் 350 கிலோ தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். ஆண்களுக்கான போட்டியில் 93 கிலோ மாஸ்டர் 2 பிரிவில் 490 கிலோ தூக்கி ரவிச்சந்திரன் வெள்ளி பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனை 2 பேரும் நேற்று காலை பட்டுக்கோட்டைக்கு வந்தனர். அவர்கள் 2 பேருக்கும் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே கிராம மக்கள் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார், நகர சபை உறுப்பினர்கள் ஜவகர்பாபு, சதாசிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.