ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரைக்கு வரவேற்பு


ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரைக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரைக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரை நேற்று கோவில்பட்டி காந்தி மண்டபம் முன்பு வந்தது. அந்த ஜோதிக்கு மனித உரிமை துறை மாநில செயலாளர் சி. காளிதாஸ், மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகர தலைவர் அருண்பாண்டியன், வடக்கு மாவட்ட தலைவர் காளிதாஸ், எஸ். சி. எஸ். டி. பிரிவு மாநில துணை தலைவர் மாரிமுத்து, நகர தலைவர் காளிதாஸ், மாவட்ட தலைவர் கண்ணாயிரம், மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தார்கள். காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் ஜோதி யாத்திரையில் பங்கேற்றுள்ளவர்கள் சாத்தூருக்கு புறப்பட்டு சென்றனர்.


Next Story