செங்கொடி பயணத்திற்கு வரவேற்பு
திருப்பத்தூரில் செங்கொடி பயணத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு வருகிற 14-ந்் தேதி முதல் 18-ந்் தேதி வரை ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் நடைபெற உள்ளது. இதற்காக இளம் கம்யூனிஸ்டுகளின் செங்கொடிப் பயணம் கேரள மாநிலம் கொல்லம் நகரில் தொடங்கியது. திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்த செங்கொடி பயண பிரசார வாகனத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டு கந்திலி திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு, திருப்பத்தூர் தாலுகா அலுவலகம், பகுதிகளில் மாநாடு விளக்க கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் எம்.சுந்தரேசன் தலைமை வகித்தார்.நகர துணைச் செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் கலந்து கொண்டு பேசினார். அகில இந்திய இளைஞர் பெருமன்ற பொதுச் செயலாளர் திருமலை, தமிழ்நாடு இளைஞர் பெருமன்ற செயலாளர் பாரதி, முன்னாள் மாவட்ட செயலாளர் சாமி கண்ணு, நந்தி முல்லை, தேவராஜ், கே.பி.மணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக திருப்பத்தூர் எல்லை வரை சென்றனர்.