செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பு


செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பு
x

ஓட்டப்பிடாரத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

தூத்துக்குடியில் இருந்து செஸ்ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஒட்டப்பிடாரத்துக்கு வந்தது. ஜோதிக்கு ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் சிலை முன்பு எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் ஜோதி தொடர் ஓட்டத்தை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், தாசில்தார் நிஷாந்தினி, யூனியன் ஆணையாளர் வெங்கடாசலம், கூடுதல் ஆணையாளர் பாண்டியராஜன், மண்டல துணை தாசில்தார் ஆனந்த், கொடியன்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார், யூனியன் கவுன்சிலர் அருணாதேவி உட்பட பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் அரசு ஊழியர்கள் கொண்டனர். முன்னதாக ஒட்டப்பிடாரம் மெயின் பஜாரில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வ.உ.சிதம்பரனார் மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு செஸ்போட்டியை எம்.எல்.ஏ தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.


Next Story