தூத்துக்குடியில் செஸ் ஒலிம்பியாட் தீபத்துக்கு வரவேற்பு


தூத்துக்குடியில் செஸ் ஒலிம்பியாட் தீபத்துக்கு வரவேற்பு
x

தூத்துக்குடியில் செஸ் ஒலிம்பியாட் தீபத்துக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடிக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் தீபத்துக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட் தீபம்

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு செஸ் ஒலிம்பியாட் தீபம் தமிழகம் முழுவதும் எடுத்து செல்லப்படுகிறது. அதன்படி செஸ் ஒலிம்பியாட் தீபம் நேற்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பு

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த ஒலிம்பியாட் தீபத்துக்கு சமூநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் அரசு அதிகாரிகள், பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு ஒலிம்பியாட் தீபத்துக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கும் தீபம் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story