மின் ஊழியர் மாநாடு கொடிக்கு வரவேற்பு


மின் ஊழியர் மாநாடு கொடிக்கு வரவேற்பு
x

முத்தையாபுரத்தில் மின் ஊழியர் மாநாடு கொடிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு 17-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான மாநாடு கொடி நெல்லையில் இருந்து ் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த கொடிக்கு முத்தையாபுரம் பஜாரில் வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் வண்ணமுத்து, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மின்ஊழியர் மத்திய அமைப்பு மாவட்ட தலைவர் மரியதாஸ், புறநகர செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story