தங்கம் வென்ற மணப்பாறை வாலிபருக்கு வரவேற்பு
ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மணப்பாறை வாலிபருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சி
கோவையில் கடந்த 17-ந் தேதி ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், இந்தோனேசியா, மங்கோலியா, ஜப்பான் உள்ளிட்ட 11 நாடுகள் கலந்து கொண்ட இப்போட்டியில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டிலிருந்து திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். பரிசு பெற்ற பாலமுருகன் நேற்று சொந்த ஊர் திரும்பிய நிலையில் அவருக்கு மணப்பாறை தி.மு.க. நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். பஸ் நிலையம் முன்பு தாரைதப்பட்டை முழங்க பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்ததுடன் மாலை மற்றும் சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பாலமுருகன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
Related Tags :
Next Story