திருச்சி-அகமதாபாத் வாராந்திர புதிய ரெயிலுக்கு வரவேற்பு
திருச்சி-அகமதாபாத் வாராந்திர புதிய ரெயிலுக்கு வரவேற்பு
தஞ்சையில் இருந்து மும்பைக்கு மெயின் லைன் வழியாக ரெயில் இயக்க வேண்டும் என பல்வேறு பொதுநல அமைப்புகள், ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் மும்பை, தஞ்சை வழியாக அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து திருச்சியில் இருந்து அகமதாபாத்துக்கு புறப்பட்ட புதிய சிறப்பு ரெயில் நேற்று காலை தஞ்சை ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது காவிரி டெல்டா ரெயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலாளர் வக்கீல் வெ.ஜீவக்குமார் ஆகியோர் தலைமையில் சிறப்பு ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ரெயில் ஓட்டுனருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். மேலும், பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வக்கீல்கள் உமர்முக்தார், பைசல் அகமது, கண்ணன், பேராசிரியர்கள் திருமேணி, செல்வகணேசன் மற்றும் காஜாமொய்தீன், கூத்தூர் ரங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.