உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் வரவேற்பு


உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் வரவேற்பு
x

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் வரவேற்பு

சிவகங்கை

திருப்புவனம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்று தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி வீரவணக்க நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு மரியாதை செய்வார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மதுரையில் இருந்து பரமக்குடிக்கு சென்ற மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு, சிவகங்கை மாவட்டம் சார்பில் திருப்புவனத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, ஜோன்ஸ் ரூசோ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், திருப்புவனம் யூனியன் தலைவர் சின்னையா, துணை சேர்மன் மூர்த்தி, மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, மானாமதுரை யூனியன் தலைவர் லதா அண்ணாதுரை, திருப்புவனம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கடம்பசாமி, வசந்திசேங்கைமாறன், நகர் செயலாளர் நாகூர்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story