கோத்தகிரி வந்த போப் ஆண்டவரின் இந்திய தூதருக்கு வரவேற்பு
கோத்தகிரி வந்த போப் ஆண்டவரின் இந்திய தூதருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நீலகிரி
கோத்தகிரி
கத்தோலிக்க திருச்சபைகளில் தலைவராக போப் ஆண்டவர் திகழ்கிறார். ஒவ்வொரு நாடுகளிலும் போப்பாண்டவரின் தூதர்கள் உள்ளனர். இதில் இந்திய நாட்டு தூதர் லிேயாபோல்டோ ஜிரெல்லி டெல்லியில் இருந்து கேரளாவுக்கு சுற்றுப்பயணம் கொண்டார். தொடர்ந்து கூடலூரிலும், நேற்று முன்தினம் ஊட்டியிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று ஆசி வழங்கினார்.
இதையடுத்து மாலை 3 மணிக்கு அவர் கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திற்கு வந்தார். அவருக்கு நூற்றுக்கணக்கான கிறிஸ்துவ மக்கள் மற்றும் கோத்தகிரி தலைமை பள்ளிவாசல் இஸ்லாமிய நிர்வாகிகள் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். பின்னர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து லிேயாபோல்டோ ஜிரெல்லி மக்களுக்கு ஆசி வழங்கினார். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story