வெல்டிங் தொழிலாளி கார் மோதி படுகாயம்


வெல்டிங் தொழிலாளி கார் மோதி படுகாயம்
x

வெல்டிங் தொழிலாளி கார் மோதி படுகாயம் அடைந்தார்.

புதுக்கோட்டை

அரிமளம் அருகே உள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 40), வெல்டிங் தொழிலாளி.

இவர் நேற்று மாலை கலைஞர் சாலையில் உள்ள நீதிமன்ற வளாகம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ராஜேஷ் (34) என்பவர் ஓட்டி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஆரோக்கிய சாமியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story