நலத்திட்ட உதவிகள்


நலத்திட்ட உதவிகள்
x

பத்தமடையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

பத்தமடை பேரூராட்சி பகுதியில், அம்பை எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனது சொந்த செலவில், ஏழை-எளிய விதவைகளுக்கு தையல் எந்திரம், சலவைத் தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி மற்றும் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை நேரில் சென்று வழங்கினார்.

மேலும் பொதுமக்களிடம் அப்பகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்தார். இதில் சேரன்மாதேவி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், பத்தமடை நகரச் செயலாளர் சங்கரலிங்கம், அம்பை ஒன்றிய துணைச் செயலாளர் பிராங்கிளின், மணிமுத்தாறு முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவன்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story