ரூ.24.16 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


ரூ.24.16 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 23 Feb 2023 6:45 PM GMT (Updated: 23 Feb 2023 6:45 PM GMT)

கடையநல்லூரில் நடந்த மனுநீதி நாள் முகாமில் ரூ.24.16 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சி 1-வது வார்டு கருப்பாநதி அருகே உள்ள மலைவாழ் மக்கள் குடியிருக்கும் கலைமான் நகரில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. இதில் 151 பயனாளிகளுக்கு ரூ.24.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.

இந்த முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் ஷீலா, உதவி கலெக்டர் கங்காதேவி, தாசில்தார் சண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் நகர்மன்ற கவுன்சிலர் முருகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மீரான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story