20 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


20 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 20 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 20 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

ஜமாபந்தி

கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். ஆனைமங்கலம், ஒக்கூர், வெங்கிடங்கால், வடகரை உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வருவாய்த்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான வீட்டுமனைப்பட்டா, வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தார்பாய், பேட்டரி ஸ்பிரேயர் உள்ளிட்ட 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) தமிமுல் அன்சாரி, கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ் குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமுதவிஜயரெங்கன், வட்ட வழங்கல் அலுவலர் நீலாயதாட்சி, மண்டல துணை தாசில்தார் சந்திரகலா, தலைமையிடத்து துணை தாசில்தார் இக்பால் நிஷா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

28 மனுக்கள்

அதேபோல் வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் கோட்டாட்சியர் (பொறுப்பு) மதியழகன் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் தாசில்தார் ஜெயசீலன், கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், தலைமை இடத்து துணை தாசில்தார் உதயகுமார், மண்டல துணை ஆய்வாளர் அறிவழகன், தனி தாசில்தார் ராஜா, தேர்தல் தாசில்தார் வேதையன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

ஜமாபந்தியில் தலைஞாயிறு ஒன்றியம் காடன்சேத்தி, பிரிஞ்சிமுளை, திருமாளம், தலைஞாயிறு அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் 28 மனுக்களை அளித்தனர். அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்து அதற்கான தீர்வு காணப்படும் என அவர் கூறினார்.


Next Story