மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் வழங்கினார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உச்சிப்புளியில் உள்ள யூனியன் அலுவலக அரங்கில் அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நேற்று காலை நடைபெற்றது. விழாவிற்கு மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.இதில் மண்டபம் யூனியன் ஆணையாளர் நடராஜன், யூனியன் துணைத் தலைவர் பகவதி லட்சுமி, முத்துக்குமார், யூனியன் மேலாளர் சோமசுந்தர் உள்பட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தின் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.

இதைத் தொடர்ந்து எலும்பு முறிவு மருத்துவர், மனநல மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், பொதுநல மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட 12 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, ஆதார், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ஆகியவற்றிற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு 2 பயனாளிகளுக்கு தையல் எந்திரம், 3 பயனாளிகளுக்கு கைபேசி, ஒரு பயனாளிக்கு சக்கர நாற்காலி, 2 பயனாளிகளுக்கு காது கேட்கும் கருவி மொத்தம் 70 ஆயிரத்து 500 மதிப்புள்ள உதவி உபகரணங்களை யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், துணைத்தலைவர் பகவதி லட்சுமி, முத்துக்குமார் ஆகியோர் இணைந்து வழங்கினார்கள்.இந்த முகாமில் மண்டபம் வட்டாரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர். முடிவில் மண்டபம் யூனியன் சார்பில் ஆணையாளர் நடராஜன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story