குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்


குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
x

குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 301 மனுக்கள் பெறப்பட்டது. இவைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 72 பேருக்கு ரூ.83.லட்சத்து 14 ஆயிரம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சிவராமன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story