மக்கள் தொடர்பு முகாமில் ரூ.20¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்; கலெக்டர் முரளிதரன் வழங்கினார்


மக்கள் தொடர்பு முகாமில் ரூ.20¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்; கலெக்டர் முரளிதரன் வழங்கினார்
x

தேனி அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ.20¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முரளிதரன் வழங்கினார்.

தேனி

தேனி அருகே அம்பாசமுத்திரம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். பின்னர், அரசு துறைகளின் சார்பில் 87 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, தேனி தாசில்தார் சரவணபாபு, தேனி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்த முகாமின் போது, கலெக்டர் தலைமையில் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

இந்த முகாமை தொடர்ந்து அம்பாசமுத்திரம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது ரேஷன் பொருட்கள் இருப்பு, குழந்தைகளுக்கான உணவு, மருத்துவ வசதிகள் போன்றவற்றை பார்வையிட்டு பல்வேறு அறிவுரைகளை அவர் வழங்கினார்.


Related Tags :
Next Story