மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.94¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்


மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.94¾ கோடியில்  நலத்திட்ட உதவிகள்
x

மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.94¾ கோடி வங்கிக்கடன் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கி வைத்தாா். இதையடுத்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.94 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் வங்கிக்கடன் இணைப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை புதுக்கோட்டையில் வழங்கினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கினார்.

இதில் 960 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு ரூ.47.45 கோடியும், 100 ஊராட்சி மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.45.10 கோடியும், 20 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி ரூ.15 லட்சமும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 9 நபர்களுக்கு இணை மானியம் ரூ.28 லட்சம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான தொடக்க நிதி ரூ.28 லட்சம், சமுதாய திறன் பள்ளிகள் அமைப்பதற்கான நிதி ரூ.79 லட்சம், சமுதாய பண்ணைப்பள்ளிகள் அமைப்பதற்கான நிதி ரூ.83 லட்சம் என 1,089 மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்த 29,300 மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.94 கோடியே 88 லட்சத்திற்கான வங்கிக் கடன் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். நிகழ்ச்சியில், சின்னத்துரை எம்.எல்.ஏ., புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், உதவித்திட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story