திண்டுக்கல் அருகே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்


திண்டுக்கல் அருகே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 21 Jun 2023 2:30 AM IST (Updated: 21 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மேற்கு மாநகர விஜய் மக்கள் இயக்கம் சார்பில், நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின் பேரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திண்டுக்கல் அருகே பொன்னகரத்தில் உள்ள தனியார் மஹாலில் நடந்தது. விழாவுக்கு மாநகர தலைவர் சையது அசாருதீன் தலைமை தாங்கினார்.

மேற்கு மாவட்ட தலைவர் தர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை, பள்ளி உபகரணங்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை-எளிய மக்களுக்கு அரிசி, குடம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக மாநகர செயலாளர் சத்தீஸ்குமார் வரவேற்றார். மாநகர இணைச் செயலாளர் அண்ணாதுரை, துணைச்செயலாளர் காதர் மீரான், கிளை நிர்வாகிகள் முத்துவீரன், டோனி, ரஞ்சித், ரகு மணிகண்டன், அருள்பாண்டி, ஆரோக்கியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story