மனுநீதி நாள் முகாமில் 127 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


மனுநீதி நாள் முகாமில் 127 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

மனுநீதி நாள் முகாமில் 127 பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியம் சுந்தரம்பள்ளி, நத்தம் வருவாய் கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் சுந்தரம் பள்ளி முருகன் கோவிலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி தலைமை வகித்தார். தாசில்தார் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் பிரியா வரவேற்றார். மாவட்டவருவாய் அலுவலர் இ.வளர்மதி, ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர்கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, சலவை பெட்டி என 127 பயனாளிகளுக்கு ரூ.42 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்கள்.

கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத் தலைவர் மோகன்குமார்., ஆத்மா தலைவர் கே.முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரங்கசாமி குமார், விஜயலட்சுமி கருணாநிதி, சுகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் சாந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர்கள் நித்தியகல்யாணி, சசிகலா நன்றி கூறினார்கள். முன்னதாக பல்வேறு அரசுத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர், எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.


Next Story