நாகலாபுரத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 128 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


நாகலாபுரத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 128 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

நாகலாபுரத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 128 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்த முகாமில், கடந்த 11.8.2022 அன்று முன்னோடியாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு இருந்த 195 கோரிக்கை மனுக்களில் 140 மனுக்களுக்கு தீர்வ காணப்பட்டது. மீதமுள்ள 55 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. முகாமில் நாகலாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 128 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார். மேலும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த உணவு வகைகள் மற்றும் தானிய வகைகளை அவர் பார்வையிட்டார். கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்


Next Story