காமராஜர் பிறந்த நாளன்று 4 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி


காமராஜர் பிறந்த நாளன்று 4 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி
x

உடன்குடியில் காமராஜர் பிறந்த நாளன்று 4 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில், உடன்குடி வட்டார காமராஜர் நற்பணி மன்ற அறக்கட்டளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அறக்கட்டளை தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று, ஜூலை 15-ந்தேதி காமராஜர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

அதன்படி, காமராஜர் பிறந்தநாள் அன்று உடன்குடி மேலபஜாரில் நண்பகலில் 4 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குதல், மாலை 6 மணிக்கு 4 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங், பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story