623 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


623 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x

சிவகாசியில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழாவில் 623 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசியில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழாவில் 623 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

பிறந்தநாள் விழா

சாட்சியாபுரம் சி.எம்.எஸ். பள்ளியில் சிவகாசி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழாவைெயாட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு மாநில நிர்வாகி வனராஜா தலைமை தாங்கினார். சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளரும், சிவகாசி யூனியன் துணைத்தலைவருமான விவேகன்ராஜ் வரவேற்றார்.

விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு 500 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள், 75 மாணவர்களுக்கு புத்தகபைகள், தூய்மை பணியாளர்கள் 30 பேருக்கு சீருடைகள், 15 பெண்களுக்கு தையல் எந்திரம், சலவை தொழிலாளர்கள் 3 பேருக்கு இஸ்திரி பெட்டிகள் என மொத்தம் 623 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மரியாதை

விழாவில் சிவகாசி யூனியன் தலைவர் முத்துலட்சுமி விவேகன்ராஜ், தி.மு.க. நிர்வாகிகள் தங்கராஜ், உதயசூரியன், காளிராஜன், முன்னாள் நகர்மன்ற தலைவர் சபையர் ஞானசேகரன், பஞ்சாயத்து தலைவர்கள் உசிலை செல்வம், கருப்பசாமி, கவிதா பாண்டியராஜன், பலராம், மாணவரணி திலிபன் மஞ்சு நாத், ஆலாவூரணி வெங்கடேசன், மண்டல தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திருத்தங்கல்

திருத்தங்கல் ரெயில் நிலையம் அருகில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள்விழாவுக்கு நகர பொறுப்பாளர் உதயசூரியன் தலைமை தாங்கி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் மண்டல தலைவர் குருசாமி, கவுன்சிலர்கள் மாணிக்கம், சுதாகர், துரைப்பாண்டியன், சசிக்குமார், ஸ்ரீநிகா சீனிவாச பெருமாள், மாரீஸ்வரி காளிராஜன், சாந்தி சிவனேசன், மகேஸ்வரி இசக்கி, ராஜேஷ், மைக்கேல், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகாசி மாநகராட்சியின் 46-வது வார்டு பகுதியில் நடைபெற்ற விழாவில் மண்டல தலைவர் சேவுகன் கருணாநிதி உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 28-வது வார்டு பகுதியில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழாவுக்கு கவுன்சிலர் வெயில்ராஜ் ஏற்பாடு செய்திருந்தார். இதில் ஜி.வி.சுரேஷ் உள்பட வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story