69 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


69 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 22 Nov 2022 11:15 AM IST (Updated: 22 Nov 2022 11:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 69 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

சிவகங்கை

சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 69 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 376 மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

இந்த கூட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 5 பள்ளி மாணவிகளுக்கும், 3 கல்லூரி மாணவிகளுக்கும் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் நாகராசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் காமாட்சி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story