847 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: பட்டுவளர்ச்சி துறையை கணினிமயமாக்க நடவடிக்கை-அமைச்சர் தா.மோ. அன்பரசன் தகவல்


847 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: பட்டுவளர்ச்சி துறையை கணினிமயமாக்க நடவடிக்கை-அமைச்சர் தா.மோ. அன்பரசன் தகவல்
x

பட்டுவளர்ச்சி துறையை கணினிமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

சேலம்

கருப்பூர்:

நலத்திட்ட உதவிகள்

பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மாநில திட்டம் மற்றும் சில்க் சமக்ரா திட்டங்களின் கீழ் 847 பட்டு விவசாயிகளுக்கு ரூ.9.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் பரெியார் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமை தாங்கினார். பட்டு வளர்ச்சித்துறை இயக்குனர் விஜயா ராணி வரவேற்றார்.

விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு 847 பட்டு விவசாயிகளுக்கு ரூ.9 கோடியே 52 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மல்பரெி நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, பட்டுப்புழு வளர்ப்பு மனை மானியம், பண்ணை உபகரணங்கள் மற்றும் தளவாடப்பொருட்கள், பவர்டீலர் எந்திரங்கள் என மொத்தம் 847 பட்டு விவசாயிகளுக்கு ரூ.9.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-

மல்பெரி நடவு மானியம்

தமிழ்நாட்டில் 3,500 ஏக்கருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த மல்பரெி நடவு மானியம், தற்போது 5 ஆயிரம் ஏக்கருக்கு உயர்த்தி வழங்கப்படுகிறது. தனி பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க அளிக்கப்படும் மானியம் ரூ.87,500-ல் இருந்து தற்போது ரூ.1,20,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது., பட்டு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு பவர் டில்லர் எந்திரம் மானியமாக வழங்கப்படுகிறது.

பட்டு விவசாயிகளுக்கு புழுவளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் அரசு மூலமே கொள்முதல் செய்து வழங்கப்படுவதால் அனைத்து பட்டு விவசாயிகளும் நவீன தொழில்நுட்பங்களை கடைபிடித்து சிறந்த பட்டுக்கூடு அறுவடை எய்திட முடிகிறது. மேலும், பட்டுவளர்ச்சித் துறையை கணினிமயமாக்க அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அமைச்சர் அன்பரசன் பேசினார்.நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துணை மேயர் சாரதாதேவி, பட்டுவளர்ச்சித் துறை இணை இயக்குனர் முருகன், பரெியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story