விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

நல்லதம்பி எம்.எல்.ஏ. விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மற்றும் கந்திலி வேளாண் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பவர் டில்லரி, விதைகள், பண்ணை கருவிகள், தென்னங்கன்றுகள், உரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆதியூர் கிராமத்தில் உள்ள கந்திலி வேளாண் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இணை இயக்குனர் ராஜசேகர் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் ராகினி வரவேற்றார்.

பவர் டில்லர், விதைகள், பண்ணை கருவிகள் உள்ளிட்ட பொருட்களை ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., ஒன்றியக் குழு தலைவர்கள் விஜியாஅருணாச்சலம், திருமதி திருமுருகன் உள்ளிட்டார் வழங்கி பேசினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ்.அன்பழகன், ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் கேஏ.குணசேகரன் உள்ளிட்ட பலர் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story