மனுநீதிநாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


மனுநீதிநாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

பெருங்கடபுத்தூர் கிராமத்தில் மனுநீதிநாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

தேசூர் பிர்காவிலுள்ள பெருங்கடபுத்தூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார்.

செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா, தெள்ளார் ஒன்றிய குழு தலைவர் கமலாலட்சி, வந்தவாசி தாசில்தார் முருகானந்தம், சமூக பாதுகாப்பு தாசில்தார் சுபாஷ் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெருங்கடபுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி ஆதிகேசவன் வரவேற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக அம்பேத்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டு மனைபட்டா, 10 பேருக்கு பட்டா மாற்றம், 26 பேருக்கு நத்தம் பட்டா, 82 பேருக்கு உழவர் பாதுகாப்பு அட்டை, 33 முதியோர்களுக்கு உதவித்தொகை, ரேஷன் அட்டை, வேளாண்மை துறை சார்பாக விசை தெளிப்பான், இடுபொருள் உள்பட நல திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதனையொட்டி பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டார்.

விழாவில் தெள்ளார் ஒன்றிய வேளாண்மை விரிவாக்க உதவி உதவி இயக்குனர் குமரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் (சுரேஷ்குமார்), தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன், பரணிதரன், தேசூர் வருவாய் ஆய்வாளர் ஜெயபிரகாஷ்,

கிராம நிர்வாக அலுவலர் ஆசைத்தம்பி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராதா, தேசூர் சுகாதார ஆய்வாளர் கணேசன், வந்தவாசி கோட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் தியாகராஜன், சாலை ஆய்வாளர் அஜிஸ், தேசூர் பேரூராட்சியின் தலைவர் ராதா ஜெக வீர பாண்டியன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் பருவதம்பூண்டி ஊராட்சி செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story