கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி அமைச்சர் பொன்முடி வழங்கினார்
கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் சட்டமன்ற அலுவலக வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சா கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் லட்சுமணன் ஏற்பாட்டின்பேரில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விழாவுக்கு வந்த அனைவரையும் லட்சுமணன் எம்.எல்.ஏ. வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு 400 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் மாவட்ட பொருளார் ஐனகராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி, நகர செயலாளர் சக்கரை, ஒன்றிய செயலாளர்கள் ராஜா, முருகன் மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, பிரபாகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், கவுன்சிலர் மணவாளன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.