கிறிஸ்தியாநகரத்தில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்


கிறிஸ்தியாநகரத்தில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்தியாநகரத்தில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி கிறிஸ்தியாநகரம் சேகரம் தங்கநகரம் சபையில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆண்கள் ஜக்கிய குழுவின் சார்பாக ஏழை, எளிய மக்கள் சேலை, உணவுப் பொட்டலங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சேகர பரிபாலனர் ஞானராஜ் கோயில்பிள்ளை தலைமையில் உதவி குருவானவர் ஜெபதுரை தொடங்கி வைத்தனர். ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக சபைஊழியர் சாலமோன்ராஜ் வரவேற்றார். இதில் ஆலய பிரதிஷ்டை கமிட்டியினர் தேவராஜ், செல்வன் கிங்ஸ்லின், கருணாகரன் கலந்து கொண்டனர். ஜெயசெல்வகுமார் நன்றி கூறினார்.


Next Story