935 பயனாளிகளுக்கு ரூ.12 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்


935 பயனாளிகளுக்கு ரூ.12 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
x

ஆம்பூர் அருகே நடந்த விழாவில் 935 பயனாளிகளுக்கு ரூ.12 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கினர்.

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே நடந்த விழாவில் 935 பயனாளிகளுக்கு ரூ.12 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கினர்.

அடிக்கல்நாட்டு விழா

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் ஊராட்சி சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.8 கோடி மதிப்பீட்டில் 160 வீடுகள் கட்டும் பணியை நேற்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்கள்.

இதனைத் தொடர்ந்து பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் செஞ்சி கே.எஸ் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

ரூ.12 கோடி நலத்திட்ட உதவி

மொத்தம் 935 பயனாளிகளுக்கு ரூ.12 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, எம்.பி.க்கள் டி.எம்.கதிர் ஆனந்த், அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, வில்வநாதன், நல்லதம்பி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சூரியகுமார், மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார், ஆம்பூர் நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அகமது, துணைத் தலைவர் ஆறுமுகம், , துத்திபட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுவிதாகணேஷ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story