நல உதவிகள் வழங்கும் விழா
கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நல உதவிகள் வழங்கும் விழாவில் மதியழகன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நல உதவிகள் வழங்கும் விழா கிருஷ்ணகிரியில் நடந்தது. விழாவுக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகரன், நிர்வாகிகள் பையம்மாள் முருகன், ஆனந்தன், டேம்பிரகாஷ், பழனி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நல உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விழாவையொட்டி கிருஷ்ணகிரி அரச கலைக்கல்லூரிக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 100 மெத்தைகள், 300 நோயாளிகளுக்கு பழம் மற்றும் ரொட்டி, கிட்டம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், நகர்மன்ற உறுப்பினர்கள் வேலுமணி, செந்தில்குமார், சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பழனி, வக்கீல் மதியழகன், வெங்கட்டப்பன், ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சீனிவாசன் நன்றி கூறினார்.