தி.மு.க. சார்பில் நல உதவிகள்


தி.மு.க. சார்பில் நல உதவிகள்
x

ஓமலூரை அடுத்த பெரியேரிபட்டி ஊராட்சி வேடப்பட்டியில் தி.மு.க. சார்பில் நலஉதவிகளை வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

சேலம்

ஓமலூர்

ஓமலூரை அடுத்த பெரியேரிபட்டி ஊராட்சி வேடப்பட்டியில் தி.மு.க. சார்பில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கட்சி கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமரன் தலைமை தாங்கினார். ஒப்பந்ததாரர் காமராஜ் முன்னிலை வகித்தார். வேடப்பட்டி கிளை செயலாளர் குழந்தைவேலு வரவேற்றார்.

விழாவில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்சி கொடியேற்றினார். மேலும் தையல் எந்திரம், சலவை பெட்டி, சமையல் பாத்திரங்கள் என ரூ.2 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை வழங்கினார்.விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு, ஓமலூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர்கள் சண்முகம், அழகிரி, பொதுக்குழு உறுப்பினர்கள் கருணாகரன், குப்புசாமி, ஒன்றிய அவைத்தலைவர் சம்பத், ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் உமா மகேஸ்வரி, சுலோச்சனா, ஒன்றிய துணை அமைப்பாளர்கள் ரமேஷ், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story