கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்


கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
x

கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

விருதுநகர்


கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் முன்னிலையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 2,150 கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.49 லட்சத்து 879 மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கருணாநிதியின் வழியினை பின்பற்றி நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி வழங்கி உள்ளார்.

உதவித்தொகை

மேலும் கட்டுமான தொழிலாளர்கள் இயற்கை மரணம் அடைந்தால் உதவித்தொகையை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன். குமார் கூறுகையில், கட்டுமான தொழிலாளர்கள் பணியிடத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 54 வகையான பணிகளில் ஈடுபடும் கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

சொந்த வீடு

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்கு நலவாரியம் மூலமாக ரூ.4 லட்சம் மொத்தமாக வழங்கப்படுகிறது. தொழிலாளர்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், தொழிலாளர் துணை ஆணையர் சுப்பிரமணியன், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ், விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், நகரசபைத்தலைவர் மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story