ஆவண எழுத்தர்களின் நல நிதியம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை,
பதிவுத்துறையை சார்ந்த தொழில் புரியும் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிதியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்குவதன் அடையாளமாக 7 ஆவண எழுத்தர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை முதல்-அமைச்சர் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story