நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
x

ரம்ஜான் பண்டிகையையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

மதுரை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காயிதே மில்லத் நகரில் நடைபெற்றது.

மாவட்ட பிரதிநிதி முகமது ஆசிக் முஸ்தபா தலைமை தாங்கினார். 49 -வது வார்டு செயலாளர் புரோஸ்கான் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் அஜீ சுல் ஹக் தொடக்க உரை நிகழ்த்தினார். 49-வது வார்டு தலைவர் ரபீக் ராஜா வரவேற்றார். தெற்கு மாவட்ட தலைவர் அப்துல் காதர் ஆலீம், புத்தாடைகளை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். இதில் 49-வது வார்டு கவுன்சிலர் சையது அபுதாஹிர், பொது கணக்கு குழு தலைவர் நூர்ஜகான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 49-வது வார்டு பொருளாளர் அஜிசுர்ரகுமான் நன்றி கூறினார்.

விழா ஏற்பாடுகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைமை நிலைய பேச்சாளர் ஜாகிர் உசேன் செய்திருந்தார். இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட நிர்வாகிகள், வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள், சுங்கம் பள்ளிவாசல், கரீம்சா பள்ளிவாசல், தாசில்தார் பள்ளிவாசல், கோ.புதூர் பள்ளிவாசல், சதாசிவ நகர் பள்ளிவாசல், யாகப்பா நகர் பள்ளிவாசல், ஹாஜிமார் தெரு பள்ளிவாசல், முனிச்சாலை பள்ளிவாசல் மற்றும் தெற்கு வாசல் பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாநகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ரம்ஜான் பண்டிகையையொட்டி புத்தாடைகள் வழங்கி வருவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் பேருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.


Related Tags :
Next Story