பக்கப்பட்டியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


பக்கப்பட்டியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

பக்கப்பட்டியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வல்லநாடு அருகே உள்ள பக்கப்பட்டியில் கருங்குளம் வடக்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தெருமுனை பிரசாரம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி தி.மு.க.கட்சி கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றிய செயலாளர் ராமசாமி வரவேற்றார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், தெற்கு ஒன்றிய செயலாளர் கால்வாய் இசக்கிபாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்காந்தி, கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் பக்கப்பட்டி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊனமுற்றோருக்கு 3 சக்கர சைக்கிள், பெண்களுக்கு தையல் எந்திரம், அயன்பாக்ஸ், விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான் கருவிகள், அரிசி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கி பேசினார். விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை நல உரிமைபிரிவு துணை அமைப்பாளர் கலீலூர்ரஹ்மான், பக்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார், வட வல்லநாடு ஊராட்சி மன்ற தலைவர் பேபி சங்கர், முறப்பநாடு கோவில்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ், வல்லநாடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திர முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கருங்குளம் வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் பக்கப்பட்டி சுரேஷ் செய்திருந்தார்.


Next Story