ரூ.1¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்
ரூ.1¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
திருவாரூர்:-
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 187 மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.21 ஆயிரத்து 895 மதிப்பிலான இலவச தையல் எந்திரங்கள், 6 பேருக்கு ரூ.30 ஆயிரத்து 108 மதிப்பிலான இலவச சலவை பெட்டிகள், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 4 பேருக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பிலான இலவச தையல் எந்திரங்கள், நரிக்குறவர் நலவாரியத்தின் மூலம் ஒருவருக்கு இறப்பு நிவாரண உதவித்தொகையாக ரூ.1 லட்சத்துக்கான காசோலை என மொத்தம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, சமூகபாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் கண்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.