எய்ட்ஸ் நோயாளிகளுக்கான நல்வாழ்வு மையம்


எய்ட்ஸ் நோயாளிகளுக்கான நல்வாழ்வு மையம்
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே எய்ட்ஸ் நோயாளிகளுக்கான நல்வாழ்வு மையத்தை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே மொட்டணம்பட்டியில் பிரான்சிஸ்கன் சபையின் பாசம் அறக்கட்டளை சார்பில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான நல்வாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் தொடக்க விழாவுக்கு பிரான்சிஸ்கன் சபை இந்திய தலைவர் பாதிரியார் பிரவீன் டிசோசா தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி மையத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார். ஜெர்மன் நாட்டின் ஆஷா அறக்கட்டளை பிரதிநிதிகள் ஹான்ஸ், மரியா, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசம் நல மைய இயக்குனர் பாதிரியார் பெலிக்ஸ் விஜய் வரவேற்றார். விழாவில் திண்டுக்கல் மறைமாவட்ட முதன்மை குரு சகாயராஜ், பொருளாளர் சாம்சன், நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஆசிரியர் சாமி தொகுத்து வழங்கினார். விழா முடிவில் பாதிரியார் சேகர் நன்றி கூறினார்.


Next Story