மதுகுடிக்க சென்றடிரைவர் திடீர் சாவு


மதுகுடிக்க சென்றடிரைவர் திடீர் சாவு
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மதுகுடிக்க சென்ற டிரைவர் திடீரென இறந்து போனார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மடத்தூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவருடைய மகன் அய்யனார் (வயது 25). டிரைவர். இவர் வீட்டின் பின்புறம் மது குடிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால், அவரது மனைவி மணிமேகலை வீட்டின் பின்புறம் சென்று பார்த்துள்ளார். அப்போது அய்யனார் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை மனைவி மீட்டு சிகிச்சைக்காக மடத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story