கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
வீரபாண்டி அருகே கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
தேனி
வீரபாண்டி அருகே உள்ள போடேந்திரபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). விவசாயி. அவருடைய மனைவி வனிதா (32). நேற்று இரவு மணிகண்டன், தனது 2 மகன்கள் மற்றும் மனைவியுடன் போடேந்திரபுரத்தில் இருந்து தேனி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
தேனி-கம்பம் சாலையில், முத்துதேவன்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் சென்றது. அப்போது அவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், வனிதா அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பின்னர் அவர், தான் வந்த மோட்டார் சைக்கிளிலேயே மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story